வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு - தொடரும் மர்மம்
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு நேற்று (24) கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மஹவலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவரது சடலம் கற்குழியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனை
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.