ஜெனிவாவில் இலங்கை பற்றிய அறிக்கை உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உரிய தீர்மானம்..
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டத் தொடரில் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஆணையாளர் வோல்கர் துர்க்கினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று வோல்கர் துர்க் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இந்த அறிக்கையைப் பரிசீலித்து, உரிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.
பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23