பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்
டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.
மூன்று சந்தேகநபர்களும் கைது
நாடு முழுவதும் 'பஸ் லலியா' செய்த கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டி-56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் நேற்று (7) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்களுடன், லலித் கண்ணங்கரவின் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் டுபாயில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து டுபாய் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 ஆகஸ்ட் 25 அன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam