லிமினி ராஜபக்சவை களமிறக்கி அனுதாப வாக்குகளை பெறும் முயற்சியில் ராஜபக்ச குடும்பத்தினர்
நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாமல் ராஜபக்சவால் அநுராதபுரத்தில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள் முடியாததால் அவரது மனைவி கலந்து கொள்ளுவார் என்று கூறப்படுகின்றது.
ஜனநாயக ரீதியாக யாருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உண்டு என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. ராஜபக்ச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது பல ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளது.
அத்தகைய குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லாத ஒருவராக லிமினி ராஜபக்ச இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றது.
இது குடும்பத்தின் ஒரு அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இலஞ்சம் - 200 மில்லியன் டொலர் இழப்பு
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri