2029க்கு முன் அனைவரும் சிறையில்! நடுநடுங்கும் ராஜபக்ச குடும்பம்..
இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, யோஷித ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அழுத்தம் அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் யோஷித ராஜபக்ச எதிர்கொண்டுள்ள சட்ட நெருக்கடிகள், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இது ராஜபக்ச குடும்பத்தினருக்கு உறக்கமில்லாத இரவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுகின்றது லங்காசிறியின் நாட்டுநடப்பு நிகழ்ச்சி..
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இழப்பு - 200 மில்லியன் டொலர் இழப்பு