தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு
மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோரும் சிகிச்சைக்காக தெபராவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிச்சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் வீதியிலிருந்து விலகிச்சென்று அருகிலிருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening