பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டம்! பலியான 11 இரசிகர்கள்
பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதனை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பலியான இரசிகர்கள்
இந்தக் சம்பவம், சின்னசுவாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium) நிகழ்ந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்றதை கொண்டாட, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண் எனவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிகுந்த மகிழ்ச்சியான தருணம் துயரமான ஒரு நிகழ்வாக மாறியதற்காக, சமூக வலைதளங்களில் இரசிகர்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
