கனடா-ஒன்ராறியோவில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய போக்குவரத்து திட்டம்
கனடா-ஒன்ராறியோ அரசு குயின் போக்குவரத்து நிலையத்தின் கீழே 40 மீட்டரில் புதிய நிலையத்தை அமைப்பதற்கான வேலையை ஆரம்பித்துள்ளது.
15.6 கிலோமீட்டர் நீளமுள்ள 40 இற்கும் மேற்பட்ட போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கவுள்ள இப்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, நாளாந்தம் 28,000 வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து வசதி
இது பற்றி அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது,
"இத்திட்டம் ஒரு போக்குவரத்துத் திட்டம் என்பதைக் கடந்து மக்களை அவர்களுக்கான வாய்ப்புகளுடன் இணைப்பது தொடர்பானது" என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒன்ராறியோ பாதை மூலம் குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்குமான செயற்றிறன் மிக்க ஒரு நகரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்" எனக் கூறினார்.
அதேபோல் ஸ்காபரோவிலுள்ள பின்தங்கிய பகுதிகளில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், விரைவானதாகவுமான போக்குவரத்துக்கு புதிய மூன்று நிறுத்தங்களை அமைத்து, நிலக்கீழ் வழித்தடப் பாதை நீட்டிப்பில் ஒன்ராறியோ அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை அடைந்துவருகிறது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
