இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள்
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(22.01.2024) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழர் தரப்புகளின் அதிருப்தி
இதன் போது தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமை தொடர்பாக தமிழர் தரப்புகள் தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோ நோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
