சாரதி ஒருவரை சுட்டு கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் : தேசபந்துவிடம் உயிரின் விலையை கேட்கும் இளைஞர்
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரின் உயிரின் விலை என்னவென்று கூற முடியுமா என சிவில் சமூக செயற்பாட்டாளர் ரஜீவ் காந்த் கேள்வி எழுப்பினார்.
ஊடக சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
ஒரு உயிரின் விலை இவ்வளவுதானா..?
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் அநியாயமான முறையில் கொலை செய்யப்படும் போது அவர்களின் உயிருக்கு நட்ட ஈடு வழங்கப்படுகின்றது. ஒரு உயிரின் விலையை இவ்வளவு தான் என்று இவர்கள் எப்படி தீர்மானிக்கின்றார்கள்.
அப்படியென்றால் தேசபந்த தென்னக்கோன் மற்றும் டிரான் அலஸ் ஆகியோரின் உயிருக்கான விலை என்னவென்று கூற முடியுமா.
இதேவேளை, நேற்று முன்தினம் சிவில் உடையில் வந்த பொலிஸார் லொறி ஒன்றினை நிறுவத்துவதற்கு முயற்சித்துள்ளனர், எனினும் யாரென்று தெரியாத அந்த லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்று தனது நண்பரின் கடைக்கு அருகில் நிறுத்தியுள்ளார்.
பின்தொடர்ந்து சென்ற அந்த பொலிஸார் சாரதியின் தலையில் துப்பாக்கியை வைத்த கொலை செய்யப்போவதாக மிரட்டி முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், சிறிது நேரத்திற்குள் அந்த சாரதியை சுட்டு கொலையும் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
