நபர் ஒருவர் கொடூரமாக கொலை - சகோதரியின் மகனின் வெறிச்செயல்
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நபர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கம்பளை, கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குடும்ப வன்முறை
காயம் அடைந்த நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாகக் கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, சகோதரியின் மகனால் கத்தியால் தாக்கி இந்தச் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள்.. யார்யாரெல்லாம் என்று பாருங்க Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க Cineulagam
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam