மஹியங்கனை பகுதியில் நடந்த கொடூர கொலை - 22 வயது இளைஞர் கைது
ஊவா - மஹியங்கனையில் உள்ள அழுக்கெட்டியாவை பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக, கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(11.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், மஹியங்கனை பொலிஸார் சிறப்பு விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
22 வயது இளைஞர் கைது
இதன்போது, கொலை வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மபாகடாவேவ பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.