நாமலின் கைதின் பின் அரசுக்கு அழுத்தமா - நெருக்கடியா.. பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள அரசியல் சூழலில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பில் வெவ்வேறு சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மிக்-27 போர் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானதும் இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் நாட்டின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan