மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான முன்னாள் ஜோதிடருக்கும் சிக்கல்!
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பணியாற்றிய அவரது முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று விசாரணை மேற்கொண்டிருந்தது.
சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நேற்று முன்னிலையாகியிருந்தார்.
மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து பல மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணம்
மகிந்தவின் ஆட்சி காலத்தில் இவர் தேசிய சேமிப்பு வங்கி (NSB) மற்றும் ஈ.டி.எப் (ETF) வாரிய இயக்குநராகவும் பதவி வகித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து அவரது தோல்விக்கு காரணமானதாக இவர் மீது சர்ச்சைகள் எழுந்த நிலையில், சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டமை, தேர்தல் நாளை நிர்ணயித்தமை, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்துதமை, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தமை என இவரே கணித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் கைது உட்பட ராஜபக்சர்களுக்கு நெருக்கமான பலர் தொடர்ச்சியாக விசாரணைகளுக்காக முன்னிலையாகி வருகின்றனர்.
இந்நிலையில்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பிரதான ஜோதிடராகவும் ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய சுமனதாஸ அபேகுணவர்தனவும் தற்போது விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.
பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
YOU MAY LIKE THIS VIDEO..