எண்ணெய் ஆய்வுக்காக மன்னார் தீவை சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடும் நடவடிக்கை! இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள தகவல்

Mannar Sri Lanka
By Ashik Sep 11, 2026 05:18 AM GMT
Report

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தை செலுத்தி உள்ளது.

எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன, இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த விடயங்கள் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் (10.09.2026) வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம், 2026 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது, நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தி உள்ளது. சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகளை ஆயர்கள் பாராட்டியுள்ளனர்.

காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம்

இத்தகைய முயற்சிகளில், மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 14 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வாக்குறுதி அளித்தபடி, இதுபோன்ற மின் நிலையங்களை மேலும் விரிவாக்கம் செய்யக்கூடாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அரசாங்கத்திற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

எண்ணெய் ஆய்வுக்காக மன்னார் தீவை சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடும் நடவடிக்கை! இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள தகவல் | Statement Catholic Bishops Conference Of Sri Lanka

இந்த கோரிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் இலங்கையின் மேன்மை தங்கிய அதிபர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. இது ஒரு நீண்ட கால தேவையாக இருந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரிதும் பங்கு வகிக்கும் சமூகத்தின் இந்தப் பிரிவுக்கான சம்பள உயர்வை இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் பாராட்டுகிறது. அதேவேளை, யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள் குறித்த பிரச்சினை தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஏற்கனவே நீண்டு கொண்டே செல்லும் செம்மணி அகழ்வாராய்ச்சிகள் நிறைவு செய்யப்பட வேண்டும். செம்மணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றங்களுக்கான உண்மையையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த இந்த முயற்சி தேவைப்படுகிறது. அதேபோல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரின் போது நடந்த பயங்கரவாதம் மற்றும் பெருந்திரளான கொலைகள் தொடர்பான பிற சம்பவங்களும், இந்தக் காலகட்டத்திற்கு முந்தைய காலத்தில் அனுபவித்த பயங்கரவாதச் செயல்களும் உள்ளன.

மன்னார் தீவில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் பாரிய சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்துவது குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நடவடிக்கையால் மக்கள் நிம்மதி இழந்துள்ள நிலையில், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன. இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம்.

முறையான கலந்தாய்வு

இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை வெளிப்படையான முறையில் நடத்துவதும், இதுபோன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். இதுபோன்ற எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைக்கும் முன்னர் உள்ளூர் பொது மக்களின் கருத்தை கண்டறிவதற்கான முறையான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மன்னார் தீவில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரமும் நீர் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் அவை பாதிக்கப்படக்கூடாது, இதன் மூலம் மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.

எண்ணெய் ஆய்வுக்காக மன்னார் தீவை சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடும் நடவடிக்கை! இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள தகவல் | Statement Catholic Bishops Conference Of Sri Lanka

எக்ஸ்பிரஸ் பேர்ல் (Express Pearl) கப்பலினால் ஏற்பட்ட விரிவான சுற்றுச்சூழல் சேதம் குறித்தும், விதிக்கப்பட்ட இழப்பீட்டை கோருவதற்கு நீதிமன்றத்தின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது. மேலும், முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நிரப்புவதன் மூலம் தற்போதைய நில மீட்பு நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்கள் கவனிக்கப்பட வேண்டும். மேலும் அபாயகரமான அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் குருநாகல் ஆயர் கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்டகை, இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் பொதுச் செயலாளர் யாழ்ப்பாண ஆயர் P. அந்தோனி ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர் அதிமேதகு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, திருகோணமலை ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் ஆண்டகை, கண்டி ஆயர் கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, காலி ஆயர் கலாநிதி ரெய்மண்ட் விக்கிரமசிங்க ஆண்டகை, பதுளை ஆயர் கலாநிதி ஜூட் நிஷாந்த சில்வா ஆண்டகை, சிலாபம் ஆயர் கலாநிதி விமல் சிறி ஜெயசூரிய ஆண்டகை, இரத்தினபுரி ஆயர். கலாநிதி அந்தோனி வைமன் குரூஸ் ஆண்டகை, மன்னார் ஆயர் அதிவண. கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, அனுராதபுரம் ஆயர். கலாநிதி சகாய ஜெயமான்ன ஆண்டகை, கொழும்பு துணை ஆயர் கலாநிதி மெக்ஸ்வெல் G. சில்வா ஆண்டகை, கொழும்பு துணை ஆயர் கலாநிதி J. D. அந்தோனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் கையொப்படமிட்டுள்ளனர். 

GalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US