பேசுபொருளாகும் 1980களின் ரெட்ரோ புகைப்படங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாம் பகிரும் புகைப்படங்கள் தனிப்பட்ட தரவுகளாகக் கருதப்படுவதோடு, அவை எடுக்கப்பட்ட இடம், நேரம் மற்றும் சாதனத்தின் பெயர் போன்ற நுட்பமான எக்சிஃப் (EXIF) தகவல்களையும் கொண்டிருக்கின்றன.
ChatGPTஇல் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அதன் நகல் OpenAI அமைப்புகளில் சேமிக்கப்பட்டு, பயனரின் கணக்கு வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.
சேகரிக்கப்படும் தகவல்கள்..
பயனர் அந்த உரையாடலை நீக்கினாலும், சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தரவுகள் சுமார் 30 நாட்கள் வரை OpenAI சேவையகங்களில் தக்கவைக்கப்படலாம்.

வணிகக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சாதாரணத் தனிநபர் கணக்குகளின் தரவுக் கொள்கைகள் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் மட்டுமன்றி பயனரின் IP முகவரி, சாதன விவரங்கள், இருப்பிடம் மற்றும் உரையாடல் பழக்கவழக்கங்கள் போன்ற பிற தகவல்களும் சேகரிக்கப்படுவதால், AI மூலம் ஒரு நபரின் முழுமையான சுயவிவரத்தை ஊகிக்க முடியும்.
[
எனவே, மற்றவர்களின் அனுமதி இன்றி அவர்களின் படங்களையோ அல்லது குழந்தைகளின் புகைப்படங்களையோ பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ள படங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், AI மாடல் பயிற்சிக்காக உங்கள் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அமைப்புகளில் (Settings) 'Data Controls' விருப்பத்தை முடக்குவது பாதுகாப்பானது.
இந்த ட்ரெண்டுகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், நாம் வழங்கும் தரவுகள் இணைய அமைப்புகளில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.
கறுப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் யோசிதவுக்கு ஆதரவாக வந்த நபருக்கு நேர்ந்த கதி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை