கறுப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் யோசிதவுக்கு ஆதரவாக வந்த நபருக்கு நேர்ந்த கதி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோசித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச்சாட்சியம் வழங்கிய சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று(10.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யோசிதவிற்கு ஆதரவாக பொய் சாட்சியம்
வழக்கு விசாரணையின் போது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை, முறையான மற்றும் சட்டப்பூர்வமான பணம் போன்று மாற்றும் யோசித வழக்கில், பாலித கமகே என்பவர் முக்கிய சாட்சியாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் முரணான கருத்துக்கள் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், பொய்யாக சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர், குறித்த சாட்சியாளரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.