அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Sep 10, 2026 08:44 AM GMT
Report

 நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) புதன்கிழமை இடம்பெற்ற பிரதமருடமான கேள்வி நேரத்தில் மனோ கணேசன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் தரப்பில் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரங்களை இழந்த மலையக மக்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் 6 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்காக வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தோம். எனினும் அது இடம்பெறவில்லை என மனோ கணேசன் எம்.பி. தெரிவிக்கின்றார்.

உண்மையில் அது அவ்வாறில்லை. அதைவிட அதிகமான வீடுகளை நாம் மலையக மக்களுக்காக வழங்கவுள்ளோம். வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்றால் அது ஒரு நாள், இரண்டு நாட்களில் முடியாத காரியம். ஹப்புத்தளையில் ஹல்துமுல்ல, கபரகலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி அதனை அந்த மக்களுக்குக் கையளித்தார்.

அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி | Anura Who Gave Land And Houses To 50 Families

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஒரு லயன் தொகுதி முற்றாக அழிந்தது. அதில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

அப்போதைய அரசின் காலத்தில் அதற்கு மாற்றீடாக மூடப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்த தேயிலைத் தொழிற்சாலையில் அந்த மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிள்ளைகளுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர். உண்மையில் அந்த மக்களின் மொழியில் கூறுவதானால் அது ஒரு அகதிகள் முகாமே.

அகதி முகாமில் வாழ்ந்தவர்களுக்கு விடுதலை

இதுவரை காலமும் அந்த மக்கள் அந்த முகாமில் தான் வாழ்ந்து வந்தனர். ஏதோ காரணங்களால் அப்போதைய அரசால் அவர்களுக்கு வீடு வழங்க முடியாமல் போனது.

எமது அரசு 2025 மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்த வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி, இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு மூன்றரை வருடங்களாக அகதி முகாமில் வாழ்ந்த மக்களுக்கு 50 வீடுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கடந்த அரச காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியே வழங்கப்பட்டது. எனினும் எமது அரசு அதனை மேலும் அதிகரித்து 10 பேர்ச் காணியை அந்த மக்களுக்கு வழங்குகின்றது.

அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி | Anura Who Gave Land And Houses To 50 Families

நாம் பூணாகலை பகுதியில் நிர்மாணித்துள்ள வீடுகளின் பெறுமதி காணியுடன் சேர்த்து 83 இலட்சமாகும். அதில் காணிக்கு 5 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நிகழ்வின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, அது வெறும் காகிதம் மட்டுமே என மனோ கணேசன் எம்.பி. கூறினார். அந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

காணி உரிமம் வழங்க நடவடிக்கை

நாம் அந்த மக்களுக்கு நிரந்தர காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் அன்று பூணாகலை நிகழ்வில் வைத்து அவ்வாறான 168 காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்கியுள்ளோம்.

மேற்படி காணிகள் தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ளமையால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். காணி சீர்திருத்த ஆணைக்குழு எமது விவசாய அமைச்சின் கீழ் உள்ளது.

அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் சாதாரண உறுதிப் பத்திரமே வழங்கப்படும். எனினும் பின்னர் நிரந்தர காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி | Anura Who Gave Land And Houses To 50 Families

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் நலன்களும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன என்பதால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு வேதனையாக இருக்கலாம். மலையக மக்களுக்கு எமது அரசு உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம் குறிப்பிட வேண்டும்.

அதிகமான வீடுகள் எமது அரசின் காலத்திலேயே நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்ததும் எமது அரசாகும்.

எவ்வாறாயினும் நாம் மலையக மக்களுக்குக் காணி வழங்குவோம், வீடுகளையும் வழங்குவோம். சம்பளத்தையும் அதிகரிப்போம். அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம் என்றார்.  

செம்மணி புதைகுழி விவகாரம்: ஐ.நா. விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு

செம்மணி புதைகுழி விவகாரம்: ஐ.நா. விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு

நல்லூர் கந்தனுக்கு இன்று தீர்த்தத் திருவிழா

நல்லூர் கந்தனுக்கு இன்று தீர்த்தத் திருவிழா


அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US