வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
சலுகை வட்டியில் கடன்
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இந்த கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச்செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், கடன்களுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச்செலுத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25