அமெரிக்காவை அதிர வைத்த ஈரான்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - வெளியான பகீர் காணொளி
ஈரான் ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், Dive-LD என அடையாளம் காணப்பட்ட இந்த ஆளில்லா நீருக்கடிக் கருவி, சிக்கலான உளவுத்துறை நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், உலகின் நவீன நீருக்கடித் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இந்தக் கருவி விளங்குவதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்த MQ-9 Reaper ஆளில்லா விமானத்தையும் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்காவின் பதில்
ஈரானின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம், ஒரு ஆளில்லா நீருக்கடிக் கருவி அதற்கு முந்தைய நாளில் செயலிழந்ததாக தெரிவித்துள்ளது.
எனினும், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் Dive-LD அதுதானா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. அந்தக் கருவி பிராந்திய கடற்பரப்பை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அது பழைய மொடல் என்பதுடன், முக்கியமான தகவல்களைச் சேகரிக்கவோ ரகசிய சோனர் அல்லது ரேடார் கருவிகளை எடுத்துச் செல்லவோ இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. pic.twitter.com/POWlEHHnd5
— Open Source Intel (@Osint613) September 8, 2026
Anduril நிறுவனத்தின் தகவல்படி, Dive-LD சுமார் 10 நாட்கள் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. மேலும், சுமார் 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒரு கருவியின் விலை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற 5 டேங்கர் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் மீதமுள்ள 27 விமான நிறுவனங்களை அமெரிக்க கருவூலத் துறை தடுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஈரானின் நிலைப்பாடு
ஈரான் ஜனாதிதபி மசூத் பெசெஷ்கியான், போரை விரும்பவில்லை என்றாலும், தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தின.
இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடும் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி தொடர்பான இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.