அவதானமாக இருக்கவும்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதானம் தேவைப்படும் நிலை
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் மேலும், பகல் வேளையில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண், அவதானம் தேவைப்படும் நிலையை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.