பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஜெர்மனியில் தரையிறக்கம்
பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
பிரித்தானிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு வழங்குநரான NATS நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணங்கள் தாமதம்
இதன் காரணமாக நாடு முழுவதும் விமானப் பயணங்கள் தாமதம் அடைந்துள்ளதுடன், பல சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்த செயற்பாடு ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் விமானப் போக்குவரத்தை பாதித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் பாதிக்கப்பட்ட விமானங்களில் ஒன்றாகும்.
இந்த இடையூறுகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24