நாட்டை நாசமாக்கியவர்களுக்கு மீண்டும் அரியணையா..! SLPP-க்கு சவால் விடும் அமைச்சர்
எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடிக்காரர்களுக்கு அரியணை இல்லை..
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாட்டைப் படுகுழியில் தள்ளி நாசமாக்கிய ஊழல், மோசடிக்காரர்கள் மீண்டும் இந்த நாட்டின் அரியணையில் ஏற மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

மக்களின் உண்மையான ஆதரவுடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் தற்போதைய அரசின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடை செய்ய முடியாது என்றார்.