ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம் - மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஷிரான் பாசிக் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கறுப்புப் பணம்
அதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தனசிறி அமரதுங்க, ஷிரான் பாஸிக்கின் போதைப்பொருள் வர்த்தக மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற உதவி செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அநுர அரசின் நடவடிக்கை
ஷிரான் பாஸிக்கின் தொலைபேசி மற்றும் வங்கிப் பரிமாற்றங்களின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.

பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.
வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24