லிமினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரின் தந்தை திலக் வீரசிங்க சொன்ன பரபரப்பான கருத்து
அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை எனவும் லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனார் பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வலையொளிதளம் ஒன்றுக்கு இன்று (10.06.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..
லிமினி தந்தைக்கு சொன்னது
நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இது எங்கிருந்து வெளியே வருகிறது? லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார். எனக்குத் தெரிந்தவரையில் இல்லை.
இன்று வரை அவர் ஏறுவாரா என்பது எனக்குத் தெரியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப் போகிறாரா? என்பது சாத்தியமில்லை.

ஆனால் இப்போது எங்களது கடமை என்னவென்றால் நாமலைப் பார்த்துக் கொள்வது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது. அதுதான் லிமினியின் கடமை. நாமலும் அவரின் பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம். வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள். 2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள்.
எனக்குத் தெரியாது. மற்றொன்றுஇ நான் அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பதுதான் கேள்வி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் - வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக அதிரடி விசாரணை
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25