நாமல் வாங்கியது லஞ்சமா நன்கொடையா! குழப்பத்தில் மகிந்த தரப்பு..
நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் லஞ்சமா அல்லது நன்கொடையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், லஞ்சம் பெறுவதும் வழங்குவதும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பணத்தை முதலில் வழங்கியதாக கூறப்படும் நிமால் பெரேராவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கருதும் தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், நாமல் ராஜபக்ச தரப்பினர், குறித்த பணம் லஞ்சமாக பெறப்படவில்லை என்று உதயகம்மன்பில குறிப்பிடுகின்றார்.
இவ்விவகாரத்தில் பணம் வழங்கியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரிடமும் சமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...