சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி
“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS..