பௌத்த பிக்குமாரின் ஆடை விவகாரம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
பௌத்த பிக்கு ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், துறவற ஆடையை (காவி உடை) நீக்குவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகி உள்ளது.
சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகப் பௌத்த பிக்கு ஒருவர் சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது, பின்பற்றப்பட வேண்டிய உத்தியோகபூர்வ நடைமுறைகள் மற்றும் சட்டப் பூர்வமான வழிமுறைகள் குறித்து இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
ஒரு பௌத்த பிக்கு சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், சிறைச்சாலைகள் ஆணையர், சிறைவாசத்தின் போது பிக்கு அணிந்திருந்த ஆடைகளைக் களைவது குறித்து பௌத்த விவகாரங்கள் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

மேலும், பௌத்த விவகாரங்கள் திணைக்களம், அதுகுறித்து சம்பந்தப்பட்ட நிகாயா அல்லது சாப்டருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் அத்தகைய ஆடைகளைக் களைவது தொடர்பான நிகாயா அல்லது சாப்டரின் நடவடிக்கைகள் குறித்தும் அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
