ஹட்டனில் கால்வாயில் பாய்ந்த லொறி விபத்து - பல மணி நேரம் போக்குவரத்து தடை
ஹட்டன் நகரில் லொறியொன்று கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பல மணித்தியாலங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(24.10.2026) ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறி விபத்து
கொழும்பு பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு பொருட்கள் ஏற்றிவந்த லொறியொன்று ஹட்டனில் பொருட்களை இறக்கிவிட்டு தலவாக்கலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் கால்வாய் முறையாக இல்லாமையினால் அடிக்கடி வாகனங்களுக்கு வழிவிடும் போது குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகுவதாகவும் ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் பல கோடிக்கணக்கான பணமிருந்தும் இந்த கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், இந்த பிரச்சினையால் மழை காலங்களில் கால்வாய்கள் நிறைந்து, வீதியில் நீர் ஆறு போடுவதாகவும், பொறுப்பவாய்ந்த அதிகாரிகள் எவ்வித கவலைமின்றி செயப்படுவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


