iPhone 18 Pro வந்துவிட்டது! Apple செய்த அதிரடி மாற்றங்கள்
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட்டரி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் முக்கிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய அம்சங்கள்
2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A20 Pro chip இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய thermal system மூலம் நீண்ட நேரம் அதிக செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக ஐபோனின் 48MP Fusion Main Camera-வில் variable aperture வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Meet iPhone 18 Pro and iPhone 18 Pro Max! We’ve made huge advancements to our camera (hello, variable aperture!), battery life, and performance, making this lineup our most powerful and intelligent yet. pic.twitter.com/y1eeCB0O9O
— Greg Joswiak (@gregjoz) September 9, 2026
இதன் மூலம் வெளிச்சத்துக்கு ஏற்ப aperture தானாக மாறுவதுடன், பயனர்கள் கேமரா அமைப்புகளை கைமுறையாகவும் கட்டுப்படுத்த முடியும். புகைப்படங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் Apple Reference Image தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக செய்தி புகைப்படக்காரர்கள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாதிரிகளில் iOS 27 மற்றும் புதிய Siri AI வசதியும் இடம்பெற்றுள்ளது.
செப்டெம்பர் முதல்
குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களின் context-ஐ புரிந்துகொண்டு பயனர்களுக்கு உதவும் வகையில் Siri AI உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் beta பதிப்பாக வெளியாகிறது.
iPhone 18 Pro-ன் eSIM-only பதிப்பு 36 மணி நேரம் வரையிலும், Pro Max 45 மணி நேரம் வரையிலும் video playback வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

மேலும், சுமார் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். கருப்பு, வெள்ளி, Glacier மற்றும் புதிய Burgundy நிறங்களில் வெளியாகும் இந்த போன்களின் சேமிப்பு திறன் 256GB முதல் 2TB வரை உள்ளது.
அமெரிக்காவில் iPhone 18 Pro-ன் ஆரம்ப விலை 1,199 டொலர், Pro Max-ன் ஆரம்ப விலை 1,299 டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 12 முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில், செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகின்றது என்று கூறப்படுகின்றது.