யாழ்.வடமராட்சியில் 33 வயது இளைஞன் வெட்டிக்கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(09.09.2026) இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட நபர் கடைக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளில் ஏறிப் புறப்பட முற்பட்ட போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் பருத்தித்துறை பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11:00 மணியளவில் சென்ற பருத்தித்துறை நீதாவான் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தடயவியல் ஆய்வு பொலிஸாரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு உட்படுத்தி வருவதுடன் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்




