இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய முன்னாள் அரச ஜோதிடர்
புதிய இணைப்பு
முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.
இவர் இன்று காலை (10) சுமார் 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்
you may like this video