இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கொண்ட ரஞ்சி சிக்கியது எப்படி..! பெருந்தொகை தங்கம் தொடர்பில் பகீர் தகவல்
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.
பாதுகாப்பு பிரிவினரால் கைது
அத்துடன், அங்கு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

ரஞ்சித் குமார அல்லது கொண்ட ரஞ்சி கடந்த மார்ச் 29ஆம் திகதி இரவு 7 மணியளவில் ஈரான், டுபாய் மீது தொடுத்த வான்வழித் தாக்குதல்களைத் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதனை நண்பர்கள் மூவருக்கு அனுப்பியமையால் டுபாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணொளிக் காட்சிகள் பரிமாறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த 17 பவுண் எடையுள்ள 2 தங்க மாலைகள், 18,000 திர்ஹம் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை சாதாரண பயணிகள் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கோல்டன் விசா
அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது, முன்னொரு சந்தர்ப்பத்தில் டுபாயிலிருந்து இத்தாலிக்கு தப்பியோட முயன்ற போது சர்வதேச பொலிஸார் ஊடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்பின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
அங்கு ஒரு வாரம் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்து, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தனது கடவுச்சீட்டையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அங்குப் பிணை கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது சகாக்கள் குழுவுடன் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளார்.
கொண்ட ரஞ்சி அங்கு தண்ணீர் போத்தல் விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதனால் அவர் கோல்டன் விசா ஒன்றையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25