ஷிரந்தி ராஜபக்சவிற்கு அடுத்தடுத்து அறுவை சிகிச்சை - உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, ஷிரந்தி ராஜபக்சவின் இதயத்துடிப்பில் மாற்றம் இருப்பதை வைத்தியர்கள் முதலில் கண்டறிந்த நிலையில் உடனடியாக ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத்துடிப்பில் மாற்றம்
அதாவது, இது பைபாஸ் அறுவை சிகிச்சை அல்ல என்றும், மாறாக பரிசோதனைகளின் போது இதயத் துடிப்பில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, அடுத்த சில நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் இன்னும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு (16.10.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலை குறித்த தகவல்கள் அறிக்கையில் உள்ளதாகவும், அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri