இலங்கையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சமையல் எரிவாயு - வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இலங்கையின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயுக்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அதனை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளன.
எனினும், எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசாங்கம் உடனடி நடவடிக்கை
இந்த நிலைமை காரணமாக நகரப்புறங்களில் வாழும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், இந்த எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு விநியோகத்தை சீரமைத்து, நாளைய தினம் நாடு முழுவதும் 7 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தையில் நிலவும் அதிக தேவையை கருத்திற் கொண்டு, கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு மேலதிகமாக, 24 ஆம் திகதியும் 3,900 மெட்ரிக் டன் எரிவாயுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri