ஈரான் மீது உடனடி தாக்குதல் இல்லை! டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு
ஈரான் மீது உடனடியாக ராணுவத் தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்றும், "இன்று எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை முழுமையாகச் செய்து முடிக்க நேரிடலாம் ("finish the job") அல்லது தெஹ்ரானுடன் ஒரு புதிய உடன்பாட்டை எட்டக்கூடும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பு
அத்துடன், போரைத் தவிர்த்து புதிய ஒப்பந்தங்களை எட்டுவது குறித்தும் வோஷிங்டன் ஆலோசித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று முதல் ஈரான் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்படலாம் என அவர் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- இதேவேளை, அமெரிக்காவின் தவறான கணக்கீடுகளால் அது ஒரு பெரிய "சேற்று நிலத்தில்" (quagmire) அல்லது சிக்கலான சூழலில் சென்று மாட்டியுள்ளது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிக்கலில் இருந்து தப்பித்து வெளியேற அமெரிக்காவே தேவையான மற்றும் சரியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan