கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர்

Sarath Weerasekara Viral Video Galagoda Aththe Gnanasara Thero
By Shadhu Shanker Oct 25, 2026 07:26 PM GMT
Report

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை அவமதிக்கும் நோக்கில் அரசாங்க ஆதரவாளர்கள் செயற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றமை தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமளித்துள்ளார்.

குறித்த ஹோட்டலுக்குச் சென்றமை தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சொகுசு ஹொட்டல் விவகாரம்

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேரர்,

தாம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தமக்கான தங்குமிட வசதிகளையும் மருத்துவ உதவிகளையும் பக்தர்களே ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமக்கு 102 பாகை பரன்ஹீட் வரை காய்ச்சல் அதிகரித்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் ஓய்வெடுப்பதற்காக ஆதரவாளர்கள் பல இடங்களில் வசதிகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


எனினும், விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறும் போராட்டத்திற்கு அருகிலேயே இருக்க விரும்பியதால், பல இடங்களுக்குச் செல்வதற்கான அழைப்புகளைத் தாம் நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தர்களின் அழைப்பின் பேரில் சில இடங்களுக்குச் சென்றதாகவும், அங்கு மருத்துவக் குழுவினரால் சிகிச்சைகளும் வழங்கப்பட்டதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்கள்

பிக்குகளுக்கு தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், பௌத்த மரபில் பக்தர்கள் பிக்குகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் உணவு, தங்குமிடம், வாகனங்கள், காணிகள் மற்றும் வீடுகளைக்கூட வழங்கி வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சிலரால் ஒரு போத்தல் தண்ணீரை வழங்க முடியும். இன்னும் சிலரால் கூடாரங்கள், உணவு அல்லது தங்குமிடங்களை வழங்க முடியும். தமது வீடுகளையும் காணிகளையும் வழங்குவதற்குக்கூட சிலர் தயாராக உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர் | Viral Hotel Video Balangoda Kassapa Thero

பௌத்த மரபில் மத நோக்கங்களுக்காக முழுமையான சொத்துகளும் கிராமங்களும்கூட நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல் அறையொன்றில் தங்கியமை தொடர்பில் ஏன் சர்ச்சை உருவாக்கப்படுகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, பிக்குகளுக்கு உதவி வழங்கியவர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் சிலர், உதவி வழங்கியவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத்வீரசேகர 

இவ்வாறான தகவல் வெளியீடுகள் பாரதூரமான விடயம் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் இயங்கும் சர்வதேச ஹோட்டல் நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இத்தகைய சம்பவங்கள் பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்பரி ஹோட்டலில் முகத்தை மூடிக்கொண்டு சரத் வீரசேகரவுடனான சந்திப்பு! பின்னணியை வெளியிட்ட கஸ்ஸப தேரர் | Viral Hotel Video Balangoda Kassapa Thero

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் பயன்படுத்தும் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அந்த விபரங்களை ஊடகங்களுக்குக் கசியவிட்டு, போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அரசாங்க ஆதரவாளர்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் தான் சுகவீனமாக இருந்ததால் முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தன்னை பார்க்க வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..

இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..

கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பில் சரத் வீரசேகர! முகத்தை மூடிச்சென்ற கஸ்ஸப்ப தேரர் - வெளியான காணொளி..

கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பில் சரத் வீரசேகர! முகத்தை மூடிச்சென்ற கஸ்ஸப்ப தேரர் - வெளியான காணொளி..

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US