கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பில் சரத் வீரசேகர! முகத்தை மூடிச்சென்ற கஸ்ஸப்ப தேரர் - வெளியான காணொளி..
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு எதிரில் கூடாரம் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரர், கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஹோட்டலுக்கு வந்தபோதும், சந்திப்பு முடிந்து வெளியேறியபோதும் தனது காவியுடையைப் பயன்படுத்தி முகத்தை மறைத்தவாறு அவர் சென்ற காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.
இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினருமான சரத் வீரசேகரவும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் நோக்கம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் முகத்தை மறைத்தவாறு ஹோட்டலிலிருந்து வெளியேறும் காட்சிகள் அடங்கிய காணொளியும் வெளியாகியுள்ளது.
ஞானசார தேரரின் விடுதலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்கு, ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு முகத்தை மறைத்தவாறு வெளியேறிய சம்பவம் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.
முழுமையான தகவல்களுக்கு லங்காசிறியின் Newsinsight நிகழ்ச்சியை காண்க..
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..