களுத்துறையில் முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாக இயக்கப்பட்டுச் சென்ற முச்சக்கர வண்டி மீது களுத்துறை நாகொட பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று, களுத்துறை போபுவள பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளது.
எனினும், பொலிஸாரின் கட்டளையைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டி நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கிச் செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை சுமார் 4 கிலோமீற்றர் தூரம் வரை பின்தொடர்ந்து சென்று, களுத்துறை நாகொட பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி காயமடைந்துள்ளதுடன், அவர் உடனடியாக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை ரஜவத்தை பகுதியைச் சேர்ந்த "ரஜவத்தை சஞ்சு" எனப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், அதிலிருந்து போதைப்பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri