மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது உடல் நிலை சற்று அசௌகரியமான நிலையில் இருப்பதாகக் குடும்ப வட்டாரங்களும் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
ஷிரந்தி ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.

எப்படியிருப்பினும், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் எழுத்துமூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ இலஞ்ச ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.