விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்
2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri