யாழில் விரிவுரையாளரின் அநாகரிக பேச்சால் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த மாணவி
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நிர்வாகம் நடவடிக்கை
குறித்த மாணவி கல்லூரி கழகம் ஒன்றின் செயற்பாட்டிற்காக சென்றிருந்த நிலையில் அந்த விடுதிக்கு பொறுப்பான பெண் விரிவுரையாளர் எங்கு சென்று வருகிறாய்? என மாணவியை கேட்டுள்ளார்.
அதற்கு தனது கழக செயற்பாட்டுக்கு கழகத் தலைவர் அழைத்ததன் காரணமாக சென்று வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

உடனே குறித்த விரிவுரையாளர் அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார். அதனைதொடர்ந்து மாணவி எழுத்து மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியருக்கிறார்.
ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக மனவிரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் சக மாணவிகளால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.