கிழக்கு ஆளுநர் அநுர அரசின் ஆளுநரா ஹிஸ்புல்லாவின் ஆளுநரா..! எழும் சந்தேகம்
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர் கி. வதனகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஆளுநர் மற்றும் தவிசாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல், வேறு சில தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
அதேபோன்று, மேலதிக கல்வி நடவடிக்கைகளைக்கூட ஆசிரியர்கள் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்..! சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமனாரின் கருத்து