22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம்: விவாதத்திற்கான திகதிகள்..
நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்களைக் கொண்ட குழு (பிசினஸ் கமிட்டி (Party Leaders' Committee / Parliamentary Business Committee) கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, நேற்று(11.09.2026) இடம்பெற்ற நிலையில், 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் மற்றும் நீதிமன்றங்களின் கட்டமைப்பு திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இரு சட்ட மூலங்கள் மீதான விவாதங்களை எடுத்துக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதி
அவ்வாறானால் குறைந்தபட்சம் 23 ஆம் திகதியாவது சபாநாயகர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அறிவிக்க வேண்டும்.
24 ஆம் திகதி காலையில் நீதிமன்ற தீர்ப்பை அறித்துவிட்டு அன்றே விவாதிக்க முடியாது அல்லவா, பொதுவாக நாடாளுமன்றத்தில் அப்படிச் செய்யும் மரபு இல்லை. பெரும்பாலும் 22 அல்லது 23 ஆம் திகதி காலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பைச் சமர்ப்பிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போதே சமர்ப்பிப்பார்.

இப்படி தான் இதுவரை காலமும் வழிமுறை பின்பற்றப்படுகின்றன.
இந்தத் தீர்மானத்தை எடுக்கும்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அரசுத் தரப்பு விசாரித்திருக்கக்கூடும்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான மனுக்களில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தான் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சி கூறுவது என்னவென்றால், 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதன் நோக்கம் தேர்தலை ஒத்திவைப்பது தான்.
மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் நீடிப்பு : கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள்