முன்னாள் ஜனாதிபதியின் மகள் வீட்டில் திருட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் வீட்டிலிருந்து பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவு உடைக்கப்பட்டு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட நபர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெறுமதிவாய்ந்த பொருட்கள்
இதன்போது சுமார் 30 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டில் இருந்த 150,000 ரூபா பெறுமதியான பணம், தங்கத்தினால் செய்யப்பட்ட ஓட்டக சிலை, கைக்கடிக்காரம், 8 சிங்கப்பூர் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri