பதற்றத்தினால் இரத்து செய்யப்படும் விமானங்கள்! வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்படவிருந்த சுமார் 20,000 இலங்கையர்களால் வெளிநாடு செல்ல முடியாது தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
விமானங்கள் இரத்து
போர்ச் சூழல் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாலும், பயணத் திகதிகள் மாற்றப்பட்டதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அச்சங்கத்தின் செயலாளர் எம்.எஃப்.எம். அர்ஷத் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக, சவூதி அரேபியா, கத்தார், குவைத், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணி, சாரதிகள், வணிக வளாகப் பணியாளர்கள் போன்ற வேலைகளுக்காக சுமார் 20,000 பேரை அனுப்ப உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தயாராகி வந்துள்ளன.
இதற்கிடையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தினமும் சுமார் ஆயிரம் பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து வந்துள்ளது.
இருப்பினும், தற்போது அந்த எண்ணிக்கை 200 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
QR முறைமையினால் எரிபொருள் நிலையங்களில் குழப்பநிலை! அதிரடியாக களமிறக்கப்படும் இராணுவம் மற்றும் பொலிஸார்
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan