QR முறைமையினால் எரிபொருள் நிலையங்களில் குழப்பநிலை! அதிரடியாக களமிறக்கப்படும் இராணுவம் மற்றும் பொலிஸார்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால், மக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசைகள்
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான சூழல் நிலவுவதாகவும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நாள் முழுவதும் வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீட்டு முறையின் கீழ் மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், கையிருப்பு தீர்ந்து வருவதால் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துள்ளது.
இருப்பினும், எரிபொருள் தீர்ந்து வருவதால் மக்கள் பொறுமையிழந்து குழப்பத்தில் ஈடுபடுவதனால், அமைதியைப் பேணுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு
இருப்பினும், பொலிஸ் படையினருடன் கூடுதலாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களைப் பாதுகாக்க இராணுவப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் பொறுமையுடனும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் இருக்குமாறு அரசாங்கம் பொதுக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan