அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமார
தற்போது வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது, இதை மக்களால் தாங்க முடியாது என்பது உண்மைதான் அதை ஏற்றுக் கொள்கின்றேன் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போரு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யுத்த மோதல்கள் காரணமாக உலகின் பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
தற்போது, உலகின் பல நாடுகளில் யுத்த மோதல்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை. அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமாரக்கு இது தெரியும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்.
நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். எனவேதான் எதிர்க்கட்சிகள் மற்றும் சதிகாரர்களின் பொய்யான பேச்சுக்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு வழமைக்கு திரும்பும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
