மீறினால் கைது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை
அடுத்த வாரத்திலிருந்து எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி QR முறைமை மூலம் பெட்ரோல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு முன்னால் வரிசையில் நிற்கின்ற சிலபேர் மோசடி நடவடிக்கைகளிலும், முரண்பாடுகளிலும் ஈடுபடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் சிவில் சமூகத்தினர் ஆகியோர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையின் பல பகுதிகளில் எரிபொருட்களை பதுக்கி வைத்தவர்கள், முரண்பாடுகளில் ஈடுபட்டவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு செல்வோர் அமைதியான முறையிலும், சட்டதிட்டத்திற்கு அமைவாகவும் எரிபொருட்களைப் பெற்று செல்லுமாறு வலியுறுத்தப்படுகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam