பிரளயா ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி! உலக நாடுகளை மிரளவைத்த சாதனை
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 5000 கிலோ எடை கொண்ட பிரளயா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO, உள்நாட்டு நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கிய ‘பிரளயா’ (Pralay) ஏவுகணையை ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் ஒடிசாவின் Dr APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பிரளயா ஏவுகணை
இந்த ஏவுகணை அடையாளம் காண முடியாத குறுநிலைப் பாதையை (quasi-ballistic trajectory) பின்பற்றி, குறித்த இலக்கை மிகத் துல்லியமாக தாக்கியுள்ளது என DRDO தெரிவித்துள்ளது.
Two consecutive flight trials of ‘PRALAY’ missile was successfully carried out on 28th and 29th July 2025 as a part of User Evaluation Trials to validate the maximum and minimum range capability of the missile system. The missiles precisely followed the intended trajectory and… pic.twitter.com/jhr0fTMZuF
— DRDO (@DRDO_India) July 29, 2025
short-range surface-to-surface யுத்த ஏவுகணையான பிரளயா ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் வரை தூரம் வரை பயணிக்ககூடியதுடன் Mach 1 முதல் Mach 1.6 வரை வேகம் கொண்டது. மேலும், சுமார் 5,000 கிலோ எடையுடையது.
MaRV (Manoeuvrable Re-entry Vehicle) தொழில்நுட்பம் மற்றும் Inertial Navigation System மற்றும் realtime திசை திருத்தும் வசதியுடன் 8x8 BEML Tatra வாகனத்திலிருந்து எளிதில் ஏவக்கூடியது.
முக்கியமான முன்னேற்றம்
பறக்கும் வழியில் திசை மாற்றம், அதிர்வுகள் மற்றும் விலகல் செயல்களால் எதிரி தடுப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை இந்தியாவின் யுத்தத் தயார்நிலையை மேம்படுத்துவதோடு, துல்லியமான, விரைவான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை இந்திய இராணுவத்திற்கு வழங்குகிறது.
DRDO தெரிவித்ததன்படி, பிரளயா ஏவுகணையின் வெற்றி சோதனை இந்தியாவின் பாதுகாப்பு தன்னிறைவு முயற்சிகளில் முக்கியமான முன்னேற்றமாகும்.
இது எதிர்பாராத ஆபத்துக்களுக்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்பு திறனைக் கட்டியெழுப்பும் என கூறப்படுகின்றது.





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
